நான் ஒரு பிரபல கோடீஸ்வரன்.. ஆனால் இனரீதியாக ஒதுக்கப்பட்டேன் - லண்டனில் நடந்த சம்பவம் - மனம் நொந்த பிரபலம்!

By Ansgar R  |  First Published Oct 16, 2023, 10:48 PM IST

கறுப்பின கோடீஸ்வரரும் பிரபல நகை ஆலோசகருமான ஒருவர், தான் லண்டன் நகரில் உள்ள ஒரு பிரபல மதுக்கடையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து என்று மனவேதனை அடைந்துள்ளார். டேவிட் பெக்காம், பர்னா பாய், ஸ்டெஃப் லண்டன், விஸ்கிட், கால்லம் ஹட்சன்-ஓடோய் மற்றும் ஜோயி எசெக்ஸ் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் சிலருடன் பணிபுரிந்த 30 வயதான லாமர் பெர்கோ தான் அவர்.


LB ஜூவல்லரி என்ற நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் தான் லாமர், இவர் கடந்த வாரம் லண்டன் நகரின் சோஹோ பகுதியில் உள்ள 100 வார்டோர் தெருவில், தனது எட்டு கறுப்பின நண்பர்களுடன், அங்குள்ள ஒரு பாருக்குள் செல்ல முயன்றபோது தான் இந்த சம்பவம் நடந்தது. முதலில் பல்வேறு காரணங்கள் கூறி அவரை அந்த பாருக்குள் நுழைய அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கூட்டமே இல்லாத அந்த பாரில், 8 நபர்களுக்கு இடமில்லை என்று கூறிய அனுமதி மறுத்துள்ளனர். 

இஸ்ரேலை எச்சரித்த ஈரான்; திசை மாறுமா போர்? அமெரிக்காவின் மாற்றத்திற்கு காரணம் இதுதானா?

Tap to resize

Latest Videos

அதனை அடுத்து அவர்கள் வெளியே காத்திருந்தபோது, அங்கே வந்த பல லண்டன் நகரத்து மக்கள் மற்றும் வெள்ளையர்களை அவர்கள் அந்த பாருக்குள் செல்ல அனுமதித்ததையும் அவர்கள் பார்த்துள்ளனர். உடனே அங்கிருந்த பணியாளரிடம் தான் இனம் சார்ந்து ஒதுக்கப்படுவதாக உணர்ந்ததாக அவர் கூறியபோது, ​​"நான் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கவில்லை, நான் பார்க்கும் நபரைக் கொண்டு தான் தீர்மானிக்கிறேன்" என்று அந்த பணியாளர் கூறியுள்ளார். உடனே திரு. பெர்கோ 10,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 10 லட்சம்) மதிப்புள்ள டேபிள்களை புக் செய்ய முன்வந்தார், இருப்பினும் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இனவெறியுடன் தனக்கு நடத்த பல விஷயங்கள் பற்றி பேசிய அவர், ''எனது துறையில், நான் இனவாதத்தை கையாள்வதற்குப் பழகிவிட்டேன். குறிப்பாக இந்த நாட்டில்(லண்டன்), அதை மறைமுகமாக காட்டுவார்கள் தவிர நேரடியாக காட்டமாட்டார்கள். இதே நாட்டில் பல முறை, நான் காரில் செல்லும்போதெல்லாம் போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளேன். அதற்கு என் நிறமும் நான் விலை உயர்ந்த கார்களும் தான் காரணம் என்றார் அவர்.

திரு. பெர்கோவின் குற்றச்சாட்டுகள் வைரலான பிறகு, பலர் அந்த பாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதற்கு அந்த நிறுவனம், சில கருப்பின பெண்கள் அவர்களுடைய பாரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டது. இருப்பினும் பலர் இந்த 2023ம் ஆண்டிலும் இனப்பாகுபாடு இருப்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிவாரணப் பணிகள்.. நிதி திரட்டும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் - SRC அறிவிப்பு!

click me!