சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள், தங்கள் நிறுவனத்திற்காக வெளிப்புறத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று MOM தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
வெப்ப அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்து.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக சிங்கப்பூரில் வெளியில் வேலை செய்பவர்கள் அதிக வெப்ப அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்று MOM எடுத்துரைத்துள்ளது. பிற ஊழியர்களை போல இல்லாமல், வெளிப்புற இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அதிக வெப்ப அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்" என்று MOM ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் மனிதவள அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய நடவடிக்கைகள் சுகாதார அமைச்சகத்தின் (MOH) வெப்ப அழுத்த நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெப்ப அழுத்தத்தின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது
வெளிப்புறப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்க, தண்ணீர் அருந்துதல், ஓய்வு மற்றும் நிழல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளின் தொகுப்பை MOM பகிர்ந்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகளில், புதிய தொழிலாளர்களுக்கு படிப்படியாக வெளிப்புற வேலைகளைச் செய்ய நேரம் வழங்கப்படுவதை உறுதிசெய்தல், மற்றும் அனைத்து வெளிப்புறப் பணியாளர்களும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறையாவது பணியாளர்களுக்கு நீரேற்றம் செய்வதை உறுதிசெய்தல் மற்றும் குவிந்த உடல் வெப்பத்தைத் தணிக்க நிழலாடிய பகுதிகளில் வழக்கமான ஓய்வு இடைவெளிகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்தல் ஆகியவை அடங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வெப்ப அழுத்த அபாயத்தை முதலாளிகள் கண்காணிக்க வேண்டும்
வேலை வழங்குபவர்கள் வெட் பல்ப் குளோப் டெம்பரேச்சரை (WBGT) ஒவ்வொரு மணி நேர வெளிப்புற வேலைகளுக்கும் கண்காணிக்க வேண்டும், குறிப்பாக அதிக வெப்பமான காலங்களில் அனைத்து முதலாளிகளும் அதை உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் நடத்தும் சம உரிமை போராட்டம் - அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின்!