மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பயங்கர குண்டு வெடிப்பு… 19 பேர் உயிரிழந்த பரிதாபம்..

Asianet News Tamil  
Published : May 23, 2017, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பயங்கர குண்டு வெடிப்பு… 19 பேர் உயிரிழந்த பரிதாபம்..

சுருக்கம்

England manchester bomb blast in a music programme

 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி அரியனா கிராண்டே. இவர்  பிரிட்டன் தலைநகர்  லண்டன் நகர் மான்செஸ்டரில் விரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இசை நிழச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதையடுத்து இசையை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர குய்டு வெடிப்பில் 19 பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.

படுகாயமடைந்த 50 க்கும் மேற்பட்டோர் அருகில்  உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம் 21000 பேர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இனி தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் இதுபற்றி கூறும் போது, குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதும் பலரும் அலறி அடித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறியதாக கூறினார்.

இந்த சம்பவத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் மிகவும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

 

 

PREV
click me!

Recommended Stories

உலகில் முதல்முறை! சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்.. கொதிக்கும் அரபு நாடுகள்!
பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!