அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது . அதில் இந்தப்படத்தில் யாருக்காவது பின்னணி குரல் கொடுக்கும் வேலை இருந்தால் மேகனுக்கு தருமாறு அவர் கேட்கிறார்
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக ஒரு திரைப்பட இயக்குனரிடம் வேலை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்தசில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். இது தாங்களாகவே எடுத்த முடிவு என்றும் கூறி இங்கிலாந்து நாட்டு மக்கள் மத்தியில் அவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். இதனை அடுத்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் முடிவு குறித்த விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அதில் இளவரசர் ஹாரி மற்றும் , வில்லியம் , இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது . கூட்டத்திற்குப் பின்னர் இரண்டாம் எலிசபெத் வெளியிட்ட அறிக்கையில் , அரசு குடும்ப உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது ஹரியும் , மேகனும் சுதந்திரமாக புது வாழ்க்கையை தொடங்க இருப்பதற்கு எங்களது முழு ஆதரவையும் கொடுக்கிறோம் , என்றதுடன் அவர்கள் மக்களின் வரிப்பணத்தை இனி அனுபவிக்க மாட்டார்கள் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார் . இந்நிலையில் குடும்பத்தைவிட்டு ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனும் வெளியேறியுள்ளனர் . கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவால் ஹாரி இளவரசர் பட்டத்தை இழந்துள்ளர்.
இந்நிலையில் கனடாவில் குடியேறியுள்ள ஹாரி- மேனன் தம்பதியர், முன்கூட்டியே இளவரசர் ஹாரி சுயமாக வேலை செய்து பிழைக்கப் போவதாக கூறியிருந்த படி தற்போது தனது மனைவி மேகனுக்கு வேலை வழங்குமாறு லயன் கிங் படத்தின் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது . அதில் இந்தப்படத்தில் யாருக்காவது பின்னணி குரல் கொடுக்கும் வேலை இருந்தால் மேகனுக்கு தருமாறு அவர் கேட்கிறார் பின்னணி குரல் கொடுப்பதில் மேகன் அனுபவம் பெற்றவர் என்றும் ஹாரி அதில் வலியுறுத்துகிறார் . அவர்களுக்கு அருகில் மேகனின் தோழியாகிய பிரபல பாடகி பியான்ஸே நின்றுகொண்டுள்ளார். அவர் ஹாரியில் பேச்சைக் கேட்க முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார் , பட்டத்து இளவரசர் தற்போது குடும்ப செலவுக்காக ஒரு இயக்குனருடன் வேலை கேட்கும் வீடியோவைக் கண்டு இங்கிலாந்து அரச குடும்பம் கடும் மன வேதனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.