அமெரிக்காவை விடாது துரத்தும் சுலைமானியின் ஆன்மா...!! மணிக்கொரு முறை மரணபீதியில் வல்லரசு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2020, 12:03 PM IST
Highlights

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் அமெரிக்காவில் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . 
 

ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .  இத்தாக்குதலால் மீண்டும் அமெரிக்கா ஈராக் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . ஈரான் நாட்டு ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து .  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.   சுலைமானி படுகொலைக்கு  அமெரிக்கா விலை கொடுத்தாக வேண்டும் என ஈரான் எச்சரித்தது இருந்தநிலையில் அமெரிக்க நாட்டின் ராணுவ துருப்புகள் மீது ஈரான் அடிக்கடி ஏவ்கணை தாக்குதல்களை நடத்தி வருகிறது .

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்கின்றன .  ஆனாலும் ஈரானின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது , இங்கு  திடீரென மூன்று ஏவுகணைகள் விழுந்து வெடித்தன ,  அந்த இடத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்,   ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன அதாவது இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினர்  நடத்தி இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளன .

சுலைமானி படுகொலைக்குப் பின்னர் பசுமை மண்டல பகுதிகளில் ஈரான் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டு ஈரான்  தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் தெரிகிறது .  இதனால் அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது .  ஆனாலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை ,  ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் அமெரிக்காவில் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

click me!