அட்வைஸ் செய்து அமித்ஷாவை வம்பிழுக்கும் ஹசீனா..!! திருப்பி அடிச்சா தாங்குமா பங்களா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2020, 5:43 PM IST
Highlights

இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு ,  அந்நாட்டில் உள்நாட்டு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டம் தேவையில்லாத ஒன்று என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார் .  இது இந்தியாவை மிகவும் எரிச்சலடைய  வைத்துள்ளது .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்  நடந்து வருகிறது இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது என நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து  வருகின்றனர். இந்நிலையில் கேரளா, மற்றும் மேற்கு வங்கம் ,  பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.  கேரளா, பஞ்சாபில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் . 

 

ஆனாலும்  பாஜக அல்லாத மாநிலங்களிலும் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது .  சில நாட்களுக்கு முன்பாக இது தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமேன் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும்  தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ,  ஆனால் அந்நாட்டின் உறுதியற்ற நிலை ஏற்பட்டால் அது அண்டை நாடுகளையும் பாதிக்கும் என கூறியிருந்தார் .  இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் தலைநகர் அபுதாபியில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,  இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு ,  அந்நாட்டில் உள்நாட்டு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.   திடீரென இந்திய அரசு இதை ஏன் செய்தது என்பது புரியவில்லை இது தேவையில்லாத ஒன்று என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர்,  இந்தியாவில் இருந்து யாரும் வங்கதேசத்துக்கு மீண்டும் திரும்பவில்லை ,  ஆனால் இந்தியாவுக்கு உள்ளேயே மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்றார் .  ஏற்கனவே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவுக்கு எதிராக அதேபோன்ற கருத்து கூறி  மலேசியாவுக்கு பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது இது மலேசியாவை கடுமையாக பாதித்துள்ள  நிலையில் வங்கதேசம் தற்போது இந்தியாவுக்கு ஆலோசனை சொல்ல முயன்றிருப்பது இந்தியாவின் கோபத்தை சம்பாதிக்கம் முயற்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
 

click me!