சீனாவை அடக்கி ஒடுக்கிவைத்த கொடுரன் கொரோனோ...!! மரண பயத்தில் நடுங்கும் சீனர்கள்... விழி பிதுங்கும் ஜி ஜின் பிங்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2020, 12:42 PM IST
Highlights

சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தங்கள் விமான நிலையங்களில் வரும் சீனர்களை பரிசோதித்த பின்னரே தங்கள் நாட்டில் அனுமதிக்கின்றனர்

சீனாவில் கொரோனோ  என்ற கொடிய வகை வைரஸ் தாக்கத்தால் அந்நாட்டு மக்கள் மரண பீதியில்  சிக்கி தவித்துவருகின்றனர்.  இந்த வைரசுக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் .  சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்குதலால் சர்வதேச நாடுகளும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளன.  இது புதுவகையான வைரஸ் என்பதால்  இந்த வைரஸ் தாக்குதல் அந்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இந்த வகை வைரஸ் தாக்கியிருப்பது  அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது . 

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2003 ஆம்  ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீன மட்டும் ஆங்காங்கில்  சார்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது இதற்கு அந்நாட்டில் சுமார் 650 பேர் பலியாகினர் .  இந்த வகை வைரஸ் தாக்கும்போது  சுவாசத்தில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டு  மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாக  இருந்தது . இந்நிலையில்  சார்ஸ் நோய்க்கு இணையாக கொரோனோ வைரஸ் கருதப்படுகிறது .  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 140 பேரிடம் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .சீன தலைநகர் பீஜிங்கில் இந்த வைரஸ் பாதிப்பு  அதிகமாக உள்ளது ,  மத்திய சீன நகரான வூஹானில்  முதன் முதலில் இந்த வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது . வூஹானில் மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானோர்  வசித்து வரும் நிலையில் அங்கு  இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது .  இந்த வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 

வூஹானின்  நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் , இதுவரை  இந்த வைரஸ் தாக்கத்தால் 89 வயதைக் கடந்த 4 பேர் பலியாகி உள்ளனர் .  இது முதியவர்களை அதிக அளவில் தாக்கும் வைரஸாக உள்ளது என தெரிவித்துள்ளனர் .  இதுவரை அந்த நகரத்தில் மட்டும் இந்த வைரசுக்கு  200 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.    சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தங்கள் விமான நிலையங்களில் வரும் சீனர்களை பரிசோதித்த பின்னரே தங்கள் நாட்டில் அனுமதிக்கின்றனர்  இதற்காக விமான நிலையங்களில்  மருத்துவ குழுக்களும்  அமைத்து கண்காணித்து வருகின்றனர் .  எப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ,  சீனாவில் கொரோனோ  வைரஸ் தாக்கம் அந் நாட்டை  மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது குறிப்பிடதக்கது.  

click me!