
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. NCS இன் படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:50 மணிக்கு, 86 N அட்சரேகை மற்றும் 96.35 E தீர்க்கரேகையில், 58 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது குறித்து என்சிஎஸின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நிலநடுக்கம்: 4.6, நேரம்: 18/05/2025 02:50:22 IST, அட்சரேகை: 2.86 N, தீர்க்கரேகை: 96.35 E, ஆழம்: 58 கிமீ, இடம்: வடக்கு சுமத்ரா, இந்தோனேஷியா," என்று பதிவிட்டுள்ளது.
<br>இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ பொருள் சேதமோ உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>