சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்! டெல்லியிலும் அதிர்வு!

By vinoth kumar  |  First Published Jan 23, 2024, 6:34 AM IST

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக  தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


சீனாவின் தெற்கு சின்சியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு பதிவாகியுள்ளது. 

சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் இரவு 11 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 பதிவாகியுள்ளது. நள்ளிரவில் தூக்கிக் கொண்டிருந்த போது  நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எதிர்காலத்தில் பரவும் இந்த நோய் கோவிட்-ஐ விட 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கும் : WHO எச்சரிக்கை

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லி மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக  தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க;- சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக மக்கள் தொகை சரிவு! காரணம் இதுதான்..!!

சீனாவில் வடமேற்கில் அமைந்துள்ல சின்ஜியாங் மாகாணம் மலைப்பகுதிகள் நிறைந்தது. பாலைவனங்களையும் கொண்ட இந்த பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

click me!