இந்தோனேசியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

Published : Jul 17, 2020, 11:03 AM IST
இந்தோனேசியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

சுருக்கம்

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால், தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். 

அப்பகுதியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம்  இதுவரை வெளியாகவில்லை. 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!