கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை ஆராய்ச்சி செய்வோர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகளும் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோசி பியர் என்று அழைக்கப்படும் ஏபிடி-29 ஹேக்கிங் குழு, ரஷ்ய உளவுத்துறையின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு, தடுப்பூசி உருவாக்கும் கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களில் தாக்குதல் நடத்துகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தடுப்பூசி ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான முயற்சி நடைபெறுவதை காண்பதாக இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறுகிறது. இந்த அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து செயல்படுகிறது.
தடுப்பூசி பற்றிய தகவல்களை திருடும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக குற்றம் சுமத்தி இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.