மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!!

Published : Aug 23, 2022, 08:52 PM ISTUpdated : Aug 23, 2022, 10:04 PM IST
மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...  ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!!

சுருக்கம்

மலேசியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  

மலேசியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதுக்குறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கே 253 கிமீ தொலைவில் இரவு 8 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேப்போல் இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா கடற்கரையில் இன்று மாலை 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜிஎஃப்இசட் ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!
ஆசைப்பட்ட நோபல் பதக்கம் கையில் வந்தாச்சு! ஆனா ஒரு கண்டிஷன்.. நோபல் கமிட்டி போட்ட குண்டு!