
இத்தாலியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் - பீதியில் மக்கள்
இத்தாலியில் ஒருமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களால் ரோம் உள்ளிட்ட நகரங்கள் குலுங்கின.
பனிக்காலத்தில் மூன்றடி பனியில் நகரம் மூழ்கிக்கிடக்கும் நிலையில் இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பள்ளிகளுக்கு சென்ற பிள்ளைகளை திரும்ப அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு பள்ளிகள் தகவல் அளித்தன.
பல அலுவலகங்களும் சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 5.7, 5.3 மீண்டும் 5.3 என இந்த மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு குறித்தும் சேதங்கள் குறித்தும் உடனடி தகவல்கள் இல்லை.
கடந்த ஆண்டு இத்தாலியின் மத்தியப் பகுதி மலை பிரதேசமான அமடிரைஸ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.