சிங்கப்பூரிலும் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு! ஆண்டுக்கு 800 டாலர்கள்!

Published : Feb 18, 2025, 11:11 PM IST
சிங்கப்பூரிலும் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு! ஆண்டுக்கு 800 டாலர்கள்!

சுருக்கம்

சிங்கப்பூர் நாட்டின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங், ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் தலா 800 சிங்கப்பூர் டாலர்கள் வவுச்சர்களாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள சுமார் 13 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு தலா 800 டாலர் மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். முதலில் மே மாதத்தில் 500 டாலர் வழங்கப்படும், மீதமுள்ள 300 டாலர் ஜனவரி 2026 இல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிப்ரவரி 18ஆம் தேதி சிங்கப்பூரின் 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களின் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் குடும்பம் தோறும் 760 டாலர் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார் .

இது வழக்கமான தள்ளுபடித் தொகையைவிட இரு மடங்கு அதிகம். இது வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இது பயனளிக்கும். குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதியதவியும் கிடைக்கும். அதே போல் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களும் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என பிரதமர் வோங் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினருக்கு 500 டாலர் கிரெடிட் கொடுக்கப்படும். 2024ஆம் ஆண்டில் அந்நாட்டு தேசிய சேவையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல கிரெடிட்களும் செயல்படும். இவற்றை PayNow அல்லது Nets QR வழியாக பணம் செலுத்தும் இடங்களில் பயன்படுத்தலாம்.

2025ஆம் ஆண்டில் 13 முதல் 20 வயதுடைய மாணவ மாணவிகளின் கல்விச் செலவுகளுக்காக கணக்கில் 500 டாலர் நிதி வரவு வைக்கப்படும். இதனை அவர்கள் கல்வி தொடர்பான செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்