புதினுடன் கைகோர்த்து ஐரோப்பிய நாடுகளை தூக்கி எறிந்த டொனால்ட் டிரம்ப்; என்ன காரணம்?

Published : Feb 18, 2025, 12:21 PM IST
புதினுடன் கைகோர்த்து ஐரோப்பிய நாடுகளை தூக்கி எறிந்த டொனால்ட் டிரம்ப்; என்ன காரணம்?

சுருக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன்-ரஷ்யா போரில் திடீரென விளாடிமிர் புதினுடன் கோர்த்து ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக திரும்பியுள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்பின் அதிரடி 

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். எதிர்பார்த்தது போல் கனடா, சீனா மற்றும் மெக்சிகோ பொருட்களின் மீது அதிக வரியை விதித்த டிரம்ப், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவை மிகப்பெரிய வரிவிதிப்பாளர் என்று நேரடியாக விமர்சித்தார். மேலும் இந்தியாவிடம் நெருக்கமாக இருக்கும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறார்.

நட்பு நாடுகள், பகை நாடுகள் என அனைவருக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து வரும் டொனால்ட் டிரம்ப், இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தனது பார்வையை திருப்பியுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த போரில் உக்ரைக்கு ஆதரவாக அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியது. உக்ரைனுக்கு பொருளாதார உதவி, ஆயுத உதவி செய்த அமெரிக்கா, தங்களது ராணுவ வீரர்களையும் உக்ரைனுக்கு ஆதரவாக நிறுத்தியது.

புதினுடன் கைகோர்த்த டிரம்ப் 

மேலும் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தன. அமெரிக்கா மற்றும் இந்த நாடுகள் அடங்கிய நோட்டோ படைகளும் உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் இருந்தன. இது தவிர ரஷ்யா மீது கடும் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டு மீது பொருளாதார தடைகளையும் விதித்து இருந்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்கா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி அமைத்துள்ளது.

அதாவது இந்நாள் வரை ரஷ்யாவுக்கு எதிராக நின்ற அமெரிக்கா திடீரென அந்நாட்டுடன் கைகோர்த்துள்ளது உக்ரைனை மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு புதினும், டிரம்பும் போனில் பேசியிருந்த நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பில்லை

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்த இரு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுக்கவில்லை. அவ்வளவு ஏன் இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கே அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை.

இவ்வளவு நாள் எதிரியாக இருந்த விளாடிமிர் புதினுடன் டொனால்ட் டிரம்ப் கைகோர்ப்பார் என்று ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைன் மட்டுமின்றி உலக நாடுகளே எதிர்பார்க்கவில்லை. இதனால் டொனால்ட் டிரம்ப் மீது ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் கடும் அதிருப்தியில் உள்ளன. உக்ரைன் ரஷ்யா போரில் டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 

'வல்லரசு நாடுகளின் பகை நல்லதல்ல' 

அதாவது இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளாதார உதவி மற்றும் அமெரிக்கா படைகளுக்கான செலவு என தேவையில்லாமல் பல மில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவழிக்க விரும்பவில்லை. இதனால் ரஷ்யாவுடன் மல்லுக்கட்டுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அத்துடன் அமெரிக்காவும், ரஷ்யாவும் உலகின் பெரும் வல்லரசு நாடுகள். இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது இருவருக்குமே பாதிப்பு என்பதை டிரம்ப் நன்கு உணர்ந்துள்ளார்.

இதனால் தான் எதிரியாக இருந்த புதினை தானாக முன்வந்து நண்பனாக மாற்றிக் கொண்டுள்ளார் டிரம்ப். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் போரையும் முடிவுக்கு கொண்டு வரவும் முடியும், ரஷ்யாவுடன் நெருக்கமாகி அமெரிக்கா வர்த்தகத்தையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

பெரிய அண்ணன் என்ற இமேஜ்

இந்நாள் வரை உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்நாள் வரை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த டிரம்ப், இப்போது தனியாக முடிவு எடுக்க ஆரம்பித்துள்ளது தன்னை உலக தலைவர்களில் இருந்து முன்னிலைப்படுத்திக் காட்டிக் கொள்ளத்தான் என கூறப்படுகிறது. 'உலக நாடுகளில் நான் தான் பெரிய தலைவர்' 'அமெரிக்கா தான் உயர்ந்தது' என்ற இமேஜை காட்டுவதற்காக டிரம்ப் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதான் நட்பு நாடாக இருக்கும் இந்தியாவையும் டிரம்ப் துணிந்து எதிர்க்க காரணம் என உலக அரசியல் நிபுணர்கள் கூறுகினனர். 

மறுபக்கம் டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உறைந்து போய் இருக்கின்றனர். டிரம்பின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து பாரீஸீல் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூடி விவாதித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்பின் மனமாற்றம் குறித்தும், உகரைன் ரஷ்யா போரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இனி டிரம்பை நம்பி பயனில்லை...

இது தவிர, டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். ''சவூதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் எங்களுக்கே அழைப்பு இல்லை. உக்ரைன் பங்கேற்காத எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பலனளிக்காது. இனி அமெரிக்காவை நம்பி பயனில்லை. ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்'' என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?