அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 29, 2020, 10:56 AM IST

ஆனால் ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்க ஆளுநர் ஆண்ட்ரூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சீனா மீண்டும் வரும் இந்த சமயத்தில், தற்போது வரை உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவைத் தொடர்ந்து, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: குட்டி ஆல்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்... குவியும் லைக்ஸ்...!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 302 பேர் பாதிப்பிற்குள்ளானது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 515 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் மட்டும் 52 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக விளங்கி வரும் நியூயார்க் நகருக்கு பயண தடை விதிக்கலாம் என்று அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்க ஆளுநர் ஆண்ட்ரூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

நியூயார்க்கை முடக்குவது சீனாவின் வுஹான் மாகாணம் போல் ஆகிவிடும், இதனால் எவ்வித பலனும் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனது முடிவிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப், நியூயார்க்கை தனிமைப்படுத்த தேவையில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

click me!