புற்று நோயை பூரணமாக குணப்படுத்தும் வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
புற்று நோயை பூரணமாக குணப்படுத்தும் வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 'தோஸ்டார்லிமாப் ' என்ற புதிய மருந்து தொடர்ந்து 6 மாத காலம் எடுத்துக் கொண்ட நிலையில் புற்று நோய் முற்றிலும் குணமடைந்துள்ளது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய், ஒரு ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர், கோடிக்கணக்கானோர் இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதார அமைப்பில் உலக அளவில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 18 வகையான புற்றுநோய்களுக்கு மருந்து சோதனை நடத்தப்பட்டது, தற்போது அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. புதிய வகை மருந்து செலுத்தப்பட்ட நிலையில் உடலில் இருந்து புற்று நோய் முற்றிலும் மறைந்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ' தோஸ்டார்லிமாப் ' என்ற மருந்து சோதனையில் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணப்படுத்த பட்டுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ' தோஸ்டார்லிமாப் ' மருந்து 500 மில்லிகிராம் அளவில் மூன்று வார இடைவெளியில் 6 மாதங்களுக்கு நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்ட அனைவரும் புற்றுநோயில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அவர்களின் உடலில் இருந்து அந்த நோய் முற்றிலும் மறைந்துள்ளது. இந்த மருந்து நோய் பரவுவதை தடுத்து நோயை அழித்துள்ளது. இந்த மருந்து உட்கொண்ட 18 பேரும் முற்றிலும் குணம் அடைந்துள்ளனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளை கொண்ட இந்த மருந்தானது மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை உட்கொண்டவர்கள் 6 மாதத்துக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் இது முதல் அத்தியாயம் ஆகும். இதுகுறித்து நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃ மெடிசின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரையில் அதன் ஆசிரியர் டாக்டர் லூயிஸ் புற்றுநோயின் வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாருக்கும் கீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்படவில்லை இது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி என அந்த ஜன்னல் தெரிவித்துள்ளது. மேலும் மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கேன்சர் சென்டரில் உள்ள புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் ஆண்ட்ரியா செர்செக், பாதிப்பில் இருந்து குணமடைந்த நோயாளிகள் தாங்கள் புற்றுநோயில் இருந்து குணமடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தற்போதைய இந்த சோதனையின் இறுதிமுடிவு உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.