கொரோனா தொற்றுக்கு மத்தியில் மங்கி பாக்ஸ் காய்ச்சல் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலக அளவில் 29 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட் ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் மங்கி பாக்ஸ் காய்ச்சல் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலக அளவில் 29 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட் ரோஸ் அதானோம் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த மங்கி பாக்ஸ் காற்றின் மூலம் பரவலாம் என அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் நோய்த்தடுப்பு வல்லுனர்கள் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில், மங்கி பாக்ஸ் வைரஸ் காற்றில் குறுகிய தூரத்தில் பரவக் கூடும் என சந்தேகிப்பதாகவும் எனவே பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த தகவல் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மங்கி பால்ஸ் வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக் கவசங்கள் அணிவது அவசியம் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது, முக கவசம் அணிவதன் மூலம் மங்க பாக்ஸ் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் மங்கி பாக்ஸ் தீவிரமாக உள்ள நாடுகளில் முன் களப்பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் இருந்தால் அவருடன் உள்ள நபர்கள் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும் இதேநேரத்தில் மங்கி பாக்ஸ் காய்ச்சல் காற்றில் பரவுகிறது என்பதை துல்லியமாக கூற இயலாது, ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூக்கிலிருந்து வெளியாகும் பெரிய சளி துளிகளின் மூலம் அது பரவ வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மங்கி பாக்ஸ் பெரிய அம்மையன் பெரிய வடிவமாக தெரிகிறது, இது கிட்டத்தட்ட அதே அறிகுறிகளை கொண்டுள்ளது, நோய் தாக்கம் லேசானது என்றாலும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் மிகவும் சாதாரணமாக இருந்து வருகிறது, ஆனால் இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வேகமாக பரவுகிறது.
இது கிட்டத்தட்ட பெரியம்மை போன்ற ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது எலிகள் மற்றும் குறிப்பாக குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது, ஒரு விலங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மனிதர்களுக்கு அதனுடன் தொடர்பு ஏற்படும்போது அந்த நபர்களுக்கு குரங்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.