இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை விட எவ்வளவு வலிமையானது தெரியுமா.? இந்தியாவுக்கு பக்கத்தில் கூட வர முடியாது

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2020, 7:13 PM IST
Highlights

21 ஆண்டு கார்கில் போர் வெற்றி நாள்  நேற்று அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் தனது பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

21 ஆண்டு கார்கில் போர் வெற்றி நாள்  நேற்று அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் தனது பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் தனது பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை 3 மடங்காக உயர்த்தியிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்ற 21 ஆவது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நாட்டினுடைய பாதுகாப்பு பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 21 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 21 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை சமாளிக்க இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் தனது பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் பாகிஸ்தானும் தனது பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை 3 மடங்காக உயர்த்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கான நிதி:

ஆனாலும் இன்றும் அதன் மொத்த பாதுகாப்பு வரவு செலவு திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தில் 14% மட்டுமே என இந்திய பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. கார்கிலுக்கு பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் எவ்வாறு அதிகரித்தது, இராணுவம்,கடற்படை, விமானப்படை  போன்றவற்றினுடைய பலம் எவ்வாறு அதிகரித்துள்ளது. அணு மற்றும் ஏவுகணை சக்திகளில் இரு நாடுகளில் எது முன்னிலையில் உள்ளது என்ற பல்வேறு கேள்விகளுக்கு அந்த விவரங்கள் பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன. எப்போதும் முதல் பயன்பாடு இல்லை என்ற அணுசக்திக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. சூழலை பொருத்து அது முடிவு செய்யப்படும் என சமீபத்தில்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் அது, நமது எதிரி நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. அதேநேரத்தில் அணுசக்தி பொருத்தவரையில், இருநாடுகளும் கிட்டத்தட்ட சமமான பலத்தில் உள்ளன.ஸ்டாக்ஹோம் என்ற சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கில்  போரின்போது இந்தியாவின் பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டம் எவ்வளவு:

கார்கில் போரின் போது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 104 ஆயிரம் கோடி, அதேநேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 23 ஆயிரம் கோடி, தற்போது பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட்  20 ஆண்டுகளில் 77 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது இன்று கூட பாகிஸ்தானின் பாதுகாப்பு வரவு செலவு திட்டம் 1999ஆம் ஆண்டின் நமது பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை விட 27 ஆயிரம் கோடி குறைவாக உள்ளது. அதேபோல் 20 ஆண்டுகளில் இந்தியா ஆயுதப் படை  வீரர்களின் எண்ணிக்கையை 7 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானால் ஒரு லட்சம் வரை மட்டுமே அதிகரிக்க முடிந்தது. ஆயுதப்படைகளின் கூற்றுப்படி இந்தியா பாகிஸ்தானை விட மூன்று மடங்கு பெரியது, 1999ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை சுமார் 2.3 மில்லியனாக இருந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் 7 லட்சம் கூடுதலாக அதிகரித்துள்ளது அதேநேரத்தில் 1999-இல் பாகிஸ்தானின் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை 8 லட்சமாக இருந்தது இப்போது அதன் எண்ணிக்கை 9 லட்சம் ஆகும். 14 லட்சம் செயலில் உள்ள ராணுவத்தை தவிர 21 லட்சம் ரிசர்வ் ராணுவமும் இந்தியாவிடம் உள்ளது, அவை எந்த அவசர காலத்திலும் செயலில் உள்ள ராணுவத்துடன் இணைக்கப்படலாம். ஆனால் பாகிஸ்தானில் 6,54,000  ராணுவ வீரர்களும்  5,50,000 ரிசர்வ் இராணுவமும் மட்டுமே உள்ளன. இந்த வகையில் பாகிஸ்தான் ராணுவத்தை விட இந்தியா மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

இந்தியாவின் ஏவுகணை வலிமை:

பாதுகாப்பு ஆய்வு மையத்தின் கூற்றுப்படி இந்தியாவில் அக்னி-3 உட்பட 9 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன, அக்னி-3 இந்தியாவின் மிக நவீன மற்றும் சக்தி வாய்ந்த ஏவுகணை ஆகும், இது பாகிஸ்தானில் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான ஷாஹீன்-2 விட அதி சக்தி வாய்ந்தது ஆகும். இந்தியாவின் அக்னி-3 அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை  3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணித்து தாக்கும்  ஆற்றல் கொண்டதாகும். அதே பாகிஸ்தானின் ஷாஹீன் 2000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து  தாக்கக்கூடியது ஆகும். இந்தியாவின் அக்னி 3 பாகிஸ்தானின் ஷாஹீன் விட இரண்டு மடங்கு வலிமையானது.
 

click me!