நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் புதிய காதலி... 67 வயதிலும் அடங்காத மோகம்... அதிர வைக்கும் பின்னணி..!

By Thiraviaraj RM  |  First Published Aug 26, 2020, 10:43 AM IST

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பிடியில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பிடியில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1993-ம் ஆண்டு மும்பை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் உட்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

Tap to resize

Latest Videos

தாவூத் இப்ராஹிமை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. ஆனால், தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறி வந்தது பாகிஸ்தான். தற்போது தாவூத் இப்ராகிம் கராச்சியில் உள்ள ஆடம்பரமான அரண்மனை ஒன்றில் வசித்து வருவதாக துல்லியமான முகவரியுடன் தெரிவித்துள்ளது. 

அது மட்டுமின்றி பாகிஸ்தானில் திரைப்படத்துறையில் உள்ள பல நடிகைகளுடன் அவர் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில், தாவூத் இப்ராஹிம் பாலிவுட்டில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார். அவர் பல பாலிவுட் படங்களில் முதலீடு செய்துவந்தார். பல இந்திய நடிகர்கள் அவரது வீட்டு விருந்துகளிலும் கலந்து கொள்ள சென்றனர். பாலிவுட் நடிகைகள் அவரது பிடியில் சிக்கி இருந்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு ஓடிவந்த பிறகும் தாவூத்தின் திரையுலகின் ஆர்வம் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

சினிமாத்துறைக்கும் நிழல் உலகத்திற்கும் உள்ள தொடர்பால் பாகிஸ்தான் திரையுலக நடிகை, 37 வயதான மெஹ்விஷ் ஹயாத் என்பவருடன் தாவூத் இப்ராஹிம் 2019ல் இருந்து உறவில் இருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்பட்ட முகம் அல்ல இந்த மெஹ்விஷ் ஹயாத். ஆனாலும் இப்போது பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் பிரபலமான முகமாக மெஹ்விஷ் ஹயாத் மாறியுள்ளார். 

முன்னதாக இவருக்கு கௌரவ விருது வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு குறித்து பெரிய சர்ச்சை எழுந்தது. பல்வேறு கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களுடனான நெருக்கம் காரணமாக பல புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகளை மெஹ்விஷ் ஹயாத் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியாயினும் சினிமா துறைக்கும் நிழல் உலக தாதா இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது. அவர் நினைத்தால் யாரையும் நட்சத்திரமாக்கி விடலாம் என்பது நிரூபணமாகி உள்ளது.

click me!