பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்... உடனடியாக நிறுத்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டம்... அடுத்து நிகழ்ந்தது என்ன?

By Narendran S  |  First Published Feb 5, 2023, 11:11 PM IST

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் அங்குள்ள மைதானம் ஒன்றில் நடைபெற இருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கிரிக்கெட் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 


பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் அங்குள்ள மைதானம் ஒன்றில் நடைபெற இருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கிரிக்கெட் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஜன.30 ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதையும் படிங்க: சீன பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: பதிலடி கொடுப்போம் என சீனா உறுதி

Latest Videos

undefined

இதில் சுமா 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள குவெட்டா பகுதியில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. 

இதையும் படிங்க: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் குவெட்டாவில் உள்ள நவாப் அக்பர் புக்தி மைதானத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கண்காட்சி ஆட்டம் நடைபெற இருந்தது. குண்டிவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து உத்தரவு கிடைத்ததை அடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது. 

click me!