covid in china:சீனாவில் கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லாக்டவுன்
கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் சீனாவில் கொரோனா தொற்று மோசமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், 4.50 கோடிக்கும் மேலான மக்கள் லாக்டவுனில் வீட்டில் முடங்கியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை 5,515பேர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், இது ஒரு மாதத்துக்கு முன் வெறும் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
தொழில்நுட்ப நகரம்
சீனாவின் தொழில்நுட்ப நகரம் எனச் சொல்லக்கூடிய ஷென்ஜென் நகரிலும் கொரோனா பரவல் காரணாக ஏராளமான நிறுவனங்கள்மூடப்பட்டுள்ளன.வரும் 20ம் தேதிவரை எந்த நிறுவனத்தையும் திறக்க அரசு தடைவிதித்துள்ளது. இந்தநகரில் மட்டும் 1.70 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
இந்த நகரங்களில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செல்போன்களுக்குத் தேவையான டச் பேனல், பிரின்டட் சர்கியூட் போர்ட் ஆகியவற்றை தயாரிக்கிறார்கள், பெரும்பாலும் தைவானைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள்.
செல்போன் பாகங்கள்
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஷென்ஜென் நகரில் உள்ள இந்தநிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தவிட்டன. ஐ-போன்களுக்கு பெரும்பாலான முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கிவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கடந்த சில நாட்களாகஉற்பத்தியை நிறுத்தியிருந்தது. கடந்த 2 நாட்களாகத்தான் கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஊழியரை வேலைக்கு அழைத்துள்ளது.உலகின் 4-வது கன்டெய்னர் துறைமுகமும் ஷெஜன் நகரில்தான் இருக்கிறது.
இந்தியாவில் விற்கப்படும் செல்போன்கள் அனைத்தும் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படுவதாகும். ஆனால், பொருட்கள் அனைத்தும் சீனாவின் ஷென்ஜென் நகரில்இருந்து இறக்குமதியானவை.
இறக்குமதி அதிகம்
இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அதிலும்மின்னணு பொருட்கள் மட்டும் ஏப்ரல்முதல் ஜனவரி வரை 766 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்துதரும் பெகாட்ரான் நிறுவனம் இந்தியாவில் அடுத்த மாதத்திலிருந்து தாயாரிப்பைத் தொடங்க இருக்கிறது. சப்ளையில் ஏற்படும் மாற்றம் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி பணியைப்பாதிக்கிறது.
சீனாவிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ரசாயனம், மருந்துப் பொருட்களான மூலப்பொருட்களை இந்தியா அதிகமாக இறக்குமதி செய்துகிறது. இந்திய மருந்துத் துறைக்கான 70% மூலப்பொருட்கள் சீனாவிலிருந்துதான் வருகின்றன.
இருப்பு அவசியம்
இந்திய செல்போன் தாயாரிப்பாளர்கள் போதுமான அளவு மூலப்பொருட்களை இருப்பு வைத்திருந்தால், உற்பத்தி பாதிக்காது. ஒருவேளை சீனாவில் லாக்டவுன் நடவடிக்கை தொடர்ந்துவரும் பட்சத்தில் இந்தியாவில் செல்போன் தயாரிப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன் உற்பத்தியில் மட்டுமல்ல, மின்னணு பொருட்கள் தயாரிப்பு, மருந்துத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.