கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற ஒரு காதல் தங்களது அன்பை பறிமாறிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற ஒரு காதல் தங்களது அன்பை பறிமாறிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் கடந்த மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் வலுத்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இதையும் படிங்க: இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ஏன்? ரணில் விக்கிரமசிங்க விளக்கம்!!
அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார். ஆனால், அவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தவறியதாகவும், அதிபர் கோட்டபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள், அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் பிரதமர் இல்லத்தைத் தொடர்ந்து அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். பிரதமர் அலுவலக கட்டடத்தின் மீது ஏறி தேசியக் கொடிகளைக் காட்டி பிரதமர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யணும்; இல்லைன்னா அடுத்தது இதுதான் போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு
முன்னதாக பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரி மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருள்களைப் பயன்படுத்தியும், சேதப்படுத்தியும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது தலைநகர் கொழும்புவிலுள்ள பிரதமர் அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை ராணுவத்தினர் தடுக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் புகுந்து முழுமையாக கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஒரு காதல் ஜோடி தங்களது அன்பை பறிமாறிக்கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.