மக்களே நாம் பட்ட அத்தனை கஷ்டமும் தீரப்போகுது.!! மே மாதத்திற்குள் 97 சதவீதம் கொரோனா வைரஸ் குறையும் என தகவல்.!!

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2020, 6:01 PM IST
Highlights

கனடாவில் மே17 ஆம் தேதிக்குள்  97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும் , ஆஸ்திரேலியாவில் மே 22 ஆம் தேதியும், ஜப்பானில் மே 18-ஆம் தேதியும் , ரஷ்யாவில் மே 19ம் தேதியும் 97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வரும் மே மாதம் முதல் இந்த வைரஸ் படிப்படியாக குறையும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் மே 21 ஆம் தேதி வாக்கில் 97% அளவுக்கு கொரோனா தாக்கம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது .  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  உலக அளவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . உலக அளவில் இந்த வைரசால் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் ,  9 லட்சம் பேர் கொரோனா வைரஸிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் துருக்கி ஈரான் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு ,  அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை எட்டியுள்ளது ,  ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.  கடந்த மூன்று மாத காலமாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில் , உலக நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இன்னும் கூட கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. அதே ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருவதால் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர், இன்னும் பலருக்கு மூன்று வேளை உணவு என்பது பெரும் கனவாக மாறியுள்ளது இதே நிலை நீடித்தால் பட்டினி சாவுகள் அதிகரிக்கக்கூடும் என்று  என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் . இந்நிலையில் எப்போது இந்த வைரஸ் முடிவுக்கு வரும் எப்போது இயல்பு வாழ்க்கையை தொடங்கும் என எதிர்பார்த்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் . 

இந்நிலையில் வரும் மே மாதத்தில் தற்போது உலக அளவில் பிடித்திருக்கும் இந்த வைரஸ் 90 முதல் 95 சதவீதம் அளவுக்கு நீங்கும் என சர்வதேச ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது ,  அதாவது உலக அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் மே 11 ஆம் தேதிக்குள் 97% அளவுக்கு கொரோனா  தாக்கம் கட்டுபாட்டுக்குள் வரும் என  கணிக்கப்பட்டுள்ளது .  இந்தியாவில் மே 21-ஆம் தேதி வாக்கில் வைரஸ் தாக்கம் 97 சதவீதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூரில் மே 5 முதல் ஜூன் 4 ஆம் தேதிக்குள் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது .  உலக அளவில் மே மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இது 100% கட்டுப்பாட்டுக்குள் வருமென கணிக்கப்பட்டுள்ளது .துருக்கி மே 16 ஆம் தேதிக்குள் 97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும்,  ஐக்கிய அரபு அமீரகத்தில் மே 11ம் தேதிக்குள் 97% அளவுக்கு வைரஸ் முடிவுக்கு வரும் .  சவுதி அரேபியாவில் ஏப்ரல் 21 முதல் மே 21-ஆம் தேதிக்குள் 97% கட்டுப்பாட்டுக்குள் வரும் இங்கிலாந்து மே 15ஆம் தேதியும் ஜெர்மனியில் மே 2 ஆம் தேதியும் ,  பிரான்சில் மே 5ம் தேதியும் ஸ்பெயினில் மே 3ஆம் தேதியும் கொரோனா முடிவுக்கு வரும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

.  

கனடாவில் மே17 ஆம் தேதிக்குள்  97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும் , ஆஸ்திரேலியாவில் மே 22 ஆம் தேதியும், ஜப்பானில் மே 18-ஆம் தேதியும் , ரஷ்யாவில் மே 19ம் தேதியும் 97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  ஈரானில் மே 19ம் தேதிக்குள் வைரஸ் கட்டுப்படுத்தப்படும் ,  கத்தாரில் மே 27 முதல்  ஜூலை 26க்குள்ளும்,  ஓமனில் மே 15 முதல் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் எனவும்,  எகிப்தில் மே 19 ஆம் தேதிக்குள் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் ஜோர்டன் பிலிப்பைன்ஸ் மலேசியா லெபனான் உள்ளிட்ட நாடுகளில் மே 6-ஆம் தேதி வாக்கில் 97% வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா குவைத் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஜூன் எட்டாம் தேதி வாக்கில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  மீண்டும் நவம்பர் டிசம்பர் ஆகிய குளிர்காலத்தில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!