அசுர வேட்டையாடும் கொரோனா வைரஸ்..! 908 உயிர்களை காவு வாங்கியது..!

By Manikandan S R S  |  First Published Feb 10, 2020, 10:31 AM IST

சுமார் 40,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 900 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஹுபே மாகாணத்தில் மட்டும் 871 உயிரிழந்துள்ளனர். உலகளவில் 908 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

சுமார் 40,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் பல மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்னர்.

சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதை தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் சுமார் 3,281 பேர் நோய் தோற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் 2003 ல் சார்ஸ் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதை விட கொடூரமான முகத்தை கொரோனா வைரஸ் காட்டி வருவதால் சீனா மட்டுமின்றி உலகநாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருக்கின்றன.

'நீ வீட்டை விட்டு வந்துரு.. போயிறலாம்'..! ஆசை வார்த்தைகள் பேசி சிறுமியை மயக்கிய வாலிபர்..!

click me!