தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரத்தில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்நிலையில், காரில் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். அவர் திடீரென வணிக வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை எந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் கார்களின் பின்னாலும், மறைவிடங்களை நோக்கியும் ஓடி பதுங்கினர்.
தாய்லாந்து நாட்டில் கண்முடித்தனமாக 26 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு பணிக வளாகத்தில் பதுங்கி இருந்த ராணுவ வீரரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரத்தில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்நிலையில், காரில் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். அவர் திடீரென வணிக வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை எந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் கார்களின் பின்னாலும், மறைவிடங்களை நோக்கியும் ஓடி பதுங்கினர்.
எனினும் வாலிபர் சுட்டதில் குண்டுகள் உடலில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் விரைந்து சென்றனர். அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த சிலரை அந்த வாலிபர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். இதனையடுத்து, வணிக வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, 24 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரை இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ஜாக்ரபந்த் தொம்மா என்பது தெரிய வந்தது. இவர் ராணுவ மையத்தின் தளவாடப் பகுதியில் இருந்து ஆயுதங்களை திருடியது தெரியவந்துள்ளது. மேலும், அந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.