உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி..!! இத்தாலியில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 22, 2020, 3:32 PM IST

கடந்த இரண்டு மாதத்திறகும் மேலாக வெளியில் தலை காட்டவே முடியாத நிலையில் வீடுகளில் முடங்கினர்.  அந்நாட்டின் பொருளாதாரத்துடன்  மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடக்கியது


கொரோனாவால்  வாட்டி வதைக்கப்பட்டு வந்த  இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது .  சீனாவின்  ஹூபே மாகாணம் வுஹானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா, இரண்டு மாதங்களுக்கும் மேலாக சீனாவை  கபளீகரம் செய்தது பின்னர் அது  அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களுக்கும் பரவி சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் தன் கோர முகத்தை காட்டி வருகிறது.  இந்நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இத்தாலி ,  ஸ்பெயின் , அமெரிக்கா ,  பிரிட்டன் , பிரான்ஸ்  ,  ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . கொரோனா வைரஸின் மையமாகவே  அமெரிக்காவும் ஐரோப்பாவும் மாறியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது

 

Latest Videos

இதுவரையில் இந்த நாட்டில் சுமார்  ஒரு லட்சத்து 83 ஆயிரத்து  958  பேர்  வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிட்டத்தட்ட 24 ஆயிரத்து  648 க்கும் அதிகமானோர் இங்கு உயிரிழந்துள்ளனர் .  இதுவரையில் சுமார் 51 ஆயிரத்து 600 பேர்  சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்,   சீனாவில் இருந்து ஐரோப்பா கண்டத்திற்கு ஊடுருவிய கொரோனா முதன்முதலில் இத்தாலியைதான் தாக்கியது, ஆரம்பத்தில் இங்கு மெல்ல பரவத் தொடங்கிய கொரோனா ஒரு கட்டத்தில்  ஒட்டு மெத்த இத்தாலியையும் கொடூரமாக தாக்கியது .  மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர், ஈவு இரக்கமின்றி தாக்கிய கொரோனாவால்  மக்கள் கொத்துக் கொத்தாக  மருத்துவமனைகளில் குவிந்தனர்.  ஏராளமான மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர் வாழ்வாதாரம் இன்று வறுமைக்கு தள்ளப்பட்டனர்.  கடந்த இரண்டு மாதத்திறகும் மேலாக வெளியில் தலை காட்டவே முடியாத நிலையில் வீடுகளில் முடங்கினர்.  அந்நாட்டின் பொருளாதாரத்துடன்  மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடக்கியது. 


 
இந்நிலையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர கூடுதலாக இரண்டு ஆண்டுகள் போராட வேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது இத்தாலியில் மையம் கொண்டிருந்த கொரோனா மெல்ல அமெரிக்காவுக்கு தாவியுள்ள நிலையில் ,  இத்தாலியில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து  வருகிறது ,  மார்ச் மாதம் 19 ,  20  ,27 ,  28 ஆகிய தேதிகளில் உச்சத்திலிருந்த கொரோனா ஏப்ரல் மாத துவக்கம் முதல் மெல்ல குறைய தொடங்கி தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது .  அங்கு இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது ,  மார்ச் 25 ,  28 ஆகிய தேதிகளில் உச்சத்திலிருந்த இறப்பு விகிதம் ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து மெல்ல குறையத் தொடங்கியுள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இத்தாலிய நோய் தடுப்பு மையம் முதல்முறையாக இத்தாலி ஆரோக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளது .கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் 486 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.  மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால்,  ஊரடங்கு கை மெல்ல தளர்த்தி மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது . இனிமேல்தான் கொரோனா வீரியமாக தாக்கப்போகிறது என எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் காட்டக்கூடாது என எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!