கொரோனா தடுப்பூசிக்கு INO-4800 என பெயரிப்பட்டுள்ளது..!! கோடிகளை கொட்டி உருவாக்குவதாக பில்கேட்ஸ் தகவல்..!!

Published : Apr 07, 2020, 11:46 AM ISTUpdated : Apr 07, 2020, 11:48 AM IST
கொரோனா தடுப்பூசிக்கு INO-4800 என பெயரிப்பட்டுள்ளது..!! கோடிகளை கொட்டி உருவாக்குவதாக பில்கேட்ஸ் தகவல்..!!

சுருக்கம்

அதில் மிகவும் பலனளிக்கக் கூடிய ஏழு மருந்துகளை தேர்வு செய்து அதற்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது,   அந்த ஏழு மருந்துகளையும்  தயாரிப்பதற்கான முயற்சிகள் தற்போது வேகம் எடுத்துள்ளன ,  அதில் ஒன்று அல்லது இரண்டு மருந்துகள் கண்டிப்பாக பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் சார்பில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வந்த நிலையில் தற்போது 2 தடுப்பூசிகள் இறுதிவடிவம் பெற்றிருப்பதாகவும் ,   INO-4800 என அத்தடுப்பூசிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான  நாடுகள் வைரசுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன , இந் நிலையில் உலக அளவில் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது  அமெரிக்கா ,  இத்தாலி ,  ஸ்பெயின் ,  ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது . 

இத்தாலியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது , இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன,   தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை ஒழிக்க முடியும் என உலகமே தடுப்பூசி ஆராய்ச்சிகளை  எதிர்பார்த்து காத்திருக்கின்றன ,  இந்நிலையல் உலக அளவிலான விஞ்ஞானிகள் இரவு பகலாக தடுப்பூசி கண்டிபிடிப்பு ஆராய்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் இந்நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி முயற்சிகள் அனைத்தும் வேகம் அடைந்து வருகிறது ,  அதில் மிகவும் பலனளிக்கக் கூடிய ஏழு மருந்துகளை தேர்வு செய்து அதற்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது,   அந்த ஏழு மருந்துகளையும்  தயாரிப்பதற்கான முயற்சிகள் தற்போது வேகம் எடுத்துள்ளன ,  அதில் ஒன்று அல்லது இரண்டு மருந்துகள் கண்டிப்பாக பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

 

அந்த  ஏழு தடுப்பூசிகளின் இரண்டு மட்டுமே பலனளிக்கும் என்றாலும் ,  அந்த 7க்கும் நிதி அளித்து வருகிறோம்,  எப்படியாவது ஒரு தடுப்பூசியாவது  இறுதி வடிவம் பெற்றுவிட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு ,  என்ற அவர் அது நிச்சயம் பயனளிக்கும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் இறுதி வடிவம் பெற்றுள்ள  ஒரு தடுப்பூசிக்கு INO-4800 என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  இந்த தடுப்பூசி இன்று சோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்த தடுப்பூசிக்கு கண்டுபிடிப்புக்காக இதுவரை  பில்கேட்சின் அறக்கட்டளை நூறு மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .  இந்நிலையில் இந்த தடுப்பூசி சோதனை முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்றும் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு பெரிய அதிர்ச்சி.. டிசம்பர் 15 முதல் புது ரூல்ஸ்.. H-1B விசா நேர்காணல்கள் ரத்து.!
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!