வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும் போது நாளொன்றுக்கு 3,130 பேர் இறப்பர் , ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81, 766 ஆக உயரும் என்றும் ,எச்சரிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டும்போது நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழக்க வாய்ப்புள்ளது என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் உலக அளவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் , உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது . இத்தாலி , ஸ்பெயின் , ஈரான் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் கொரோனா வைரஸின் மையம் என அமெரிக்காவை தற்போது உலக நாடுகள் உச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது . இது அமெரிக்க மக்களை மிகுந்த கலக்கமடைய செய்துள்ளது . இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வரைபடம் , அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்று நோயின் உச்சநிலையை அடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட உச்ச நிலையை அடையும்போது நாளொன்றுக்கு 3,130 அமெரிக்கர்கள் இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது . அதாவது வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள வரைபடங்கள் ஒரு மாநிலத்தின் இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை அதிகரிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தற்போது நியூயார்க்கில் வைரஸ் உச்சநிலையை நெருங்கிள்ளது , வரும் வியாழக்கிழமை இது உச்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உச்சத்தை அடையும் அன்று 878 பேர் இறக்கக்கூடும் , அதேபோல மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கும் , கிட்டத்தட்ட 12,500 மருத்துவமனை படுக்கைகள் குறைவாக உள்ளதாகவும். கார்டன் மாநிலத்திலும் படுக்கைகள் அதிகம் தேவைப்படும் என்றும், அங்கு 16 ஆயிரத்து 800க்கும் அதிகமான படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும் போது நாளொன்றுக்கு 3,130 பேர் இறப்பர் , ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81, 766 ஆக உயரும் என்றும் , அமெரிக்கா முழுவதும் 36, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனை படுக்கைகள் அவசியம் என்றும், சுமார் 16, 300க்கும் அதிகமான ( ICU)அவரச சிகிச்சை பிரிவுகள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மேலும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .