கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில் அல்லது நவம்பர் 2020 இல் நிறைவு பெற்றுவிடும் என்று தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 2020 அல்லது அதிகபட்சம் ஜனவரி 2021 க்குள் கத்தார் நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைத்து விடும் என்று தெரிவித்துள்ளது. கோவிட்-19 மருத்துவம் உலகெங்கும் வணிகமயமாகி வரும் சூழ்நிலையில், பெரும் விலைமதிப்புள்ள இத்தடுப்பூசிகள், கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.