ட்ரம்ப் விரைவில் குணமடைய கிம் ஜாங் உன் வாழ்த்து..!! வட கொரிய அதிபரின் மனித நேயம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 3, 2020, 5:24 PM IST

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை என கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையிலும், ட்ரம்ப் முகக் கவசம் அணிவதை தவிர்த்து வந்தார். 


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுமெனவும், அவர் விரைவில் நலம் பெறுவார் என தான் நம்புவதாகவும் வட கொரிய  அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது முதல் மனைவி மெலானியா ஆகிய இருவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என கிம் ஜாங் உன் அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அவரது மனைவி மெலனிய டிரம்ப்புக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்புக்கு  குளிர் மற்றும் மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளதாகவும், மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கொரோனா பாசிடிவ் ஆன பின்னர். அதிபர் டிரம்ப் மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல், சளி மற்றும் சுவாசிப்பதில் சிறிது சிரமம் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. ட்ரம்புக்கு இன்னும் சில சோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டியிருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் இல்லாத நிலையில் பிரச்சாரத்தை துணை ஜனாதிபதி  மைக் பென்ஸ் மற்றும் நான்சி பெலோசி ஆகியோர் கையாளுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிபர் டிரம்ப் தனது பணியை மருத்துவமனையிலிருந்து கவனித்துக் கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் டிரம்ப் 18 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  " நான் நன்றாக இருக்கிறேன்,  முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு வந்தேன், மனைவி மெலானியாவும் நன்றாக இருக்கிறார், விரைவில் குணமடைந்து உங்களை சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவ நிர்வாகம், ட்ரம்ப் மருத்துவமனைக்கு வந்த போது பலவீனமாக இருந்தார், மேலும் அவர் நடப்பதில்கூட சிரமம் இருந்தது. தற்போது அவர் முக கவசம் அணிந்து இருக்கிறார். அதே நேரத்தில் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவில் அவர் தம்ஸ் அப் வெற்றியின் அடையாளத்தை காட்டுவது போல வீடியோ இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்  ஜூட் மான், கூறுகையில் அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருப்பதால் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பிரச்சாரத்தை தலைமைதாங்கி நடத்துவார், நான்சி பெலோசி அவர்களுக்கு உதவுவார். 

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை என கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையிலும், ட்ரம்ப் முகக் கவசம் அணிவதை தவிர்த்து வந்தார். ஒருவேளை அவர் முகக் கவசம் அணிந்திருந்தால், வைரஸ் தொற்றிலிருந்து அவர் தப்பித்திருக்க முடியும்.  அதேநேரத்தில் முக கவசம் அணிவதை அவர் தொடர்ந்து கேலி செய்து விமர்சித்து வந்தார். இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர் முகக் கவசத்தை அணிந்திருந்தார் முகக் கவசத்தை அணிவது தேவையற்றது, வேதனையானது என அவர் கூறிவந்தார். தற்போது அவருக்கு தோற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் முகக் கவசம் அணிந்து உள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின்  நிபுணரும் மருத்துவருமான டேவிட் நெஸ், ட்ரம்ப் முககவசம் அணிந்திருந்தால் அவர் தொற்றிலிருந்து தப்பித்திருக்க முடியும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு நிச்சயம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என கூறியுள்ளார். அதேநேரத்தில்  ட்ரம்பின் தேர்தல்பிரச்சார மேலாளரும் ஃபில் ஸ்டீபனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். புதன்கிழமை அதிபரின் நிகழ்ச்சியின்போது ஃபில் ஸ்டீபனு ஜனாதிபதியுடன் இருந்தார். அப்போது ட்ரம்புடன் 6 பேர் இருந்தனர். 

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் ட்ரம்ப் விரைவில் நலமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடகொரிய செய்தி  நிறுவனத்தின் கூற்றுப்படி, அதிபர் கிம் ஜாங் உன், ட்ரம்புக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளதாகவும், அதில் அதிபர் டிரம்ப் விரைவில் நலம் அடைவார் என்று நம்புகிறேன், அவரின் முதல் மனைவி மெலானியா ட்ரம்ப்பும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். கிம் ஜாங் உன் இதுபோன்று டிரம்புக் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!