இந்திய ராணுவம் சீனாவிற்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்த இந்தியா புதிய ஆயுதங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், எல்லையில் குவித்து இந்தியாவிற்கு பயம் காட்ட முயற்சி செய்து வருகிறது. பதிலுக்கு இந்திய ராணுவம் சீனாவிற்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்த இந்தியா புதிய ஆயுதங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுசீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில், அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் சவுரியா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் பலசோர் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக எட்டியது. இதனையடுத்து இந்த ஏவுகணை அதே பிரிவில் இருக்கும் ஏவுகணைகளுடன் படையில் சேர்க்கப்பட உள்ளது.
தற்போதுள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணையானது இலகுவாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை கடைசி கட்டத்தில் அதன் இலக்கை நெருங்கும் போது, ஏவுகணை ஒலியை விட அதிக வேகத்தில் நகர்ந்ததாகவும் அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஏவுகணைத் துறையில் முழு தன்னிறைவை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவது குறித்து பிரதமர் மோடி இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தபின்னர், டிஆர்டிஓ தனது பணியை மேலும் விரைவுபடுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணையின் முந்தைய பதிப்பு 100 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை எட்டியிருந்த நிலையில், அது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.