அமெரிக்காவை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது போல..!! 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2020, 1:25 PM IST
Highlights

 ஜூன் மாத கடைசி நாட்களிலிருந்து தொற்று நோயின் வேகம் அதிகரித்துள்ளது என்றும், அதன் தாக்கம் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. 

எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மற்றொரு புறம் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை அந்நாட்டில் 36 லட்சத்து 17 ஆயிரத்து 40 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரத்து 150 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 16 லட்சத்து 45 ஆயிரத்து 966 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.18 லட்சத்து 30 ஆயிரத்து 924 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 16 ஆயிரத்து 459 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சராசரியாக 10 லட்சம்  பேரில் 10 ஆயிரத்து 925 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதாக ஜான் ஹாப்கின்ஸ் தொற்றுநோய் அளவீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பை பொருத்தவரையில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக  423 பேர் என்ற விகிதத்தில்  உயிரிழப்பதாக பதிவாகி உள்ளது.  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு 4 கோடியே 48  லட்சம் பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் ஒரே நாளில் (கடந்த 24 மணி நேரத்தில்) 70 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும்,  இந்த அளவிற்கு நோய்த்தொற்று பதிவாகி இருப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அப்பல்கலைக்கழகம்,  இதுவரை  இந்த வைரசுக்கு அதிக உயிர்களை இழந்த  அமெரிக்காவில், ஜூன் மாத கடைசி நாட்களிலிருந்து தொற்று நோயின் வேகம் அதிகரித்துள்ளது என்றும், அதன் தாக்கம் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

click me!