20 வயது மகனால் கர்ப்பிணியான 35 வயது தாய்... திருமணம் செய்து கொள்ள இப்படியொரு காரணமா..?

By Thiraviaraj RM  |  First Published Jul 16, 2020, 11:39 AM IST

மகனைத் திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், மகனை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என விளக்கமளித்துள்ளார். 


மகனைத் திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், மகனை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என விளக்கமளித்துள்ளார். 

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவரை 4,20,000 பேர் பின்தொடர்கிறார்கள். தன்னுடைய அன்றாட வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வரும் மரினா, சமீபத்தில், 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனைக் கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

இதைப் பார்த்து நெட்டிசன்கள் குழம்பிப் போன நிலையில், கடந்த வாரம் அந்த வாலிபரைத் திருமணம் மரினா திருமணம் செய்தார். இது மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மற்றொரு தகவலையும் அவர் வெளியிட்டார். அதாவது, மரினா திருமணம் செய்துகொண்ட இளைஞர், தனது வளர்ப்பு மகன் எனக் கூறி இருந்தார். 

தற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அலெக்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்குப்பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் மரினா. அப்போது விலாடிமிருக்கு வயது 7. பின்னர் மரினா மற்றும் வளர்ப்பு மகன் விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது 35 வயதாகும் மரினா, 20 வயதாகிய வளர்ப்பு மகனான விலாடிமிரை திருமணம் செய்து கொண்டுள்ளார். எதற்காக வளர்ப்பு மகனைத் திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்த காரணத்தை மரினா தற்போது தெரிவித்துள்ளார். என்னுடைய வளர்ப்பு மகனான விலாடிமிர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அது காதலாக மாறிய நிலையில், என்னுடைய உணர்வு குறித்து விலாமிரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவனும் சம்மதம் தெரிவிக்க, தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளோம். இதனிடையே விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரினா விருப்பப்பட்டுள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள அவர் பதிவு திருமணம் செய்து கொண்டார். 

click me!