ஒபாமா, பில்கேட்ஸ், ஜோ பிடனுக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்கள்..!! பிரபலங்களை அலறவிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 16, 2020, 11:39 AM IST

அந்த வகையில் அமெரிக்காவின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அக்கணக்குகளை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர்.


அமெரிக்காவில் தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முக்கிய பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை தங்கள் கருத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக வலைதளங்களையே பிரதானமாக பயன்படுத்துகின்றனர். மக்களை விரைந்து தொடர்புகொள்ள சிறந்த ஊடகமாக சமூக வலைதளங்கள் இருந்து வருகிறது. லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்ட பிரபலங்கள் வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா கிராம், போன்ற சமூக வளைதளங்களில் பதிவிடும் கருத்துக்கள் ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கானவர்களை சென்றடைகிறது. ஆனால் சில நேரங்களில் இந்த கணக்குகள் சமூக விரோத கும்பல்களால் ஹேக் செய்யப்பட்டு அதை தவறாக பயன்படுத்தும் ஆபத்தும் அவ்வப்போது நடந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

அந்த வகையில் அமெரிக்காவின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அக்கணக்குகளை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர். அந்த வகையில்  முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் பிரபலங்கள் உட்பட பலரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டுள்ளது.  இந்த பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த பின்னர், ஹேக்கர் கிட்டத்தட்ட அனைவரின் கணக்குகளில் இருந்தும் ஒரே மாதிரியான ட்வீட்களை பதிவு செய்துள்ளனர். ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளில், கிரிப்டோ நாணய பிட்காயின்களுக்கான தேவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்தும் பிட்காயின் கோரி ஹேக்கர்கள் ட்வீட் செய்துள்ளனர். பில் கேட்ஸ் கணக்கில் 1000 பிட்காயின்களுக்கு 2000 பிட்காயின்களை திருப்பித் தருவதாக ஹேக்கர்கள் பதிவிட்டனர். பலரின் ஸ்கிரீன்ஷாட்களை பலர் எடுக்க முடிந்த போதிலும் போலி ட்விட்கள் அனைத்தும் அதிலிருந்து அதிவேகமாக  நீக்கப்பட்டன. 

இது குறித்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்து அறிந்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பிரபல அமெரிக்க பாப் நட்சத்திரம் கன்யே வெஸ்ட், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் வெஸ்ட், அமெரிக்க வணிக அதிபர் வாரன் பபெட் மற்றும் மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரின் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டன. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, பிரபலங்கள், பிரபல வர்த்தகர்கள் மற்றும் உலகின் பெரிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். தற்போது, ​​ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் கட்டுப்படுத்தப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த கணக்குகளை யார் ஹேக் செய்தார்கள் என்ற தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இலக்கு வைக்கப்பட்ட கணக்குகள் அனைத்துமே கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை கொண்ட கணக்குகள் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!