சீன அதிபரின் பெயரை கேட்டவுடன் கொந்தளித்த ட்ரம்ப்..!! வெள்ளை மாளிகையில் அதிரடி..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 15, 2020, 6:46 PM IST

சீனாவை எதிர்த்து போராடவும், எங்கள் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகின்றேன்


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். அவருடன் பேசுவதற்கு தனக்கு  எந்த திட்டமும் இல்லை எனவும் ட்ரம்ப் காட்டமாக கூறியுள்ளார். கடந்தாண்டு இறுதியில்  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக அளவில் 1.34 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5. 82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 78. 80 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 35 லட்சத்து 47 ஆயிரத்து 413 பேர்  வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1 லட்சத்து 39 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் அது கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மொத்த கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்றும், சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் கசிந்தது என்றும் அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவதிலும் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் கிழக்கு லடாக் பகுதியில்  இந்திய எல்லையில் அத்துமீறிய சீனாவை அமெரிக்கா எதிர்த்து குரல் கொடுத்தது. தைவான் மற்றும் ஹாங்காங் விவகாரத்திலும் சீனாவை அமெரிக்கா கடுமையான விமர்சித்து வருகிறது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பகை அதிகரித்துள்ளது. இந்நிலையில்  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா குறித்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம் ஏதும் இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை,  அவருடன் பேசவே தனக்கு விரும்பமில்லை என தெரிவித்துள்ளார். உலகம் முழுமைக்கும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியது மட்டுமல்லாமல் அதை மறைத்து பொய் சொல்லி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவி இருப்பதற்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். இந்த வைரஸ் பரவலுக்கு சீனாவே முழு பொறுப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சீனா நினைத்திருந்தால் இந்த வைரசை அவர்களது நாட்டிலேயே தடுத்து நிறுத்தி இருக்க முடியும், ஆனால் அது அப்படி செய்யவில்லை. உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறது. எப்படியோ ஆரம்பத்தில் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்த நபர்களை தடுத்ததன் மூலம் அமெரிக்காவில் பல உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன. சீனாவை எதிர்த்து போராடவும், எங்கள் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகின்றேன். கொரோனா மூலம் சீனா உலக நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது, ஆனால் ஜோ பிடன் அமெரிக்கா சீனாவை ஒரு போட்டியாளராக பார்ப்பது முற்றிலும் விசித்திரமானது என கூறிகிறார், நான் சொல்கிறேன் அவர்கள் உண்மையிலேயே விசித்திரமானவர்கள், சீனாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார், அது அப்படி இல்லை, கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் சீனா அமெரிக்காவிடமிருந்து பறித்தவைகள் அதிகம்.
 

click me!