shanghai lockdown: 60 நாட்களுக்குப்பின் ஷாங்காய் நகரில் இயல்புநிலை: நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

By Pothy Raj  |  First Published May 31, 2022, 11:20 AM IST

shanghai lockdown: corona in china :சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறைவான பரவல் இருக்கும் இடங்களுக்கு மக்கள் தடையின்றிச செல்லலாம், பொதுப்போக்குவரத்து, தனியார் வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட உள்ளது.


shanghai lockdown சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறைவான பரவல் இருக்கும் இடங்களுக்கு மக்கள் தடையின்றிச செல்லலாம், பொதுப்போக்குவரத்து, தனியார் வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட உள்ளது.

ஏறக்குறைய 60 நாட்களுக்கும் மேலாக ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் காரணாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு லாக்டவுனிலேயே மக்கள் முடங்கியிருந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படுவதால் நாளை முதல் ஷாங்காய் நகரில் மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.

Latest Videos

undefined

வாடகைக் கார்கள், தனியார் வாகனங்கள் குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு இயக்க அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல பொதுப் போக்குவரத்தும், குறைந்பரவல் இருக்கும் இடங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படுகிறது. 

கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள், இனிமேல், வெளியேவந்து தங்களின் உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டாரைச் சந்தித்து மகிழ்வார்கள். 

ஆனால் ஷாங்காய் நகரில் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களை திறக்க ஷாங்காய் நகர நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. 
ஷாங்காய் நகரில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் செய்தி அறிந்தவுடன் மக்கள் வீடுகளில் ஆடிப்,பாடி மகிழ்ந்தனர். சிலர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சீனாவில் பிரபலமாக இருக்கும் வீ-சாட் சமூக வலைதளம் மூலம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, நாளை(புதன்கிழமை) எங்கு சந்திக்கலாம், என்ன சாப்பிடலாம் என்ன குடிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் ஷாங்காய்நகரம் முழுமையாக இயல்புநிலைக்கு வந்துவிட்டதாகக் கூற இயலாது. இன்னும் உடற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதியில்லை, திரையரங்குகள், நாடகக்கூடங்கள், கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்-லைன் மூலம்தான் பாடங்களைப் படித்து வருகிறார்கள்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கினாலும், தொழிலாளர்கள் பெரும்பாலானவர்களை தொழிற்சாலையில்தங்கவைத்தும், அல்லது அருகே ஏதாவது ஒரு இடத்தில் தங்கவைத்தும் வேலைபார்க்கக் கூறி வருகிறார்கள். 
ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது 3 நாட்களுக்கு ஒருமுறை பிசிஆர் பிரசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!