
ஆப்ரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலகளவில் பெருந்தொற்றாக மாறு வாய்ப்பு இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது.
முதன் முதலாக பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இதுவரை உலகம் முழுக்க சுமார் 400-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
புதிய சூழல்:
குரங்கு அம்மை நோய் பாதிப்பு, “வழக்கத்திற்கு புதிதான சூழ்நிலை” என குறிப்பிட்டு இருக்கிறது. எனினும், இந்த வைரஸ் குறித்து அதிக அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரிடம் நெருங்கி பழகுவோருக்கு மட்டுமே பரவுகிறது. மேலும் இது அபாயத்தை ஏற்படுத்தும் அளவிலான நோய் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.
மேற்கு ணற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது மற்றொரு பெருந்தொற்றை ஏற்படுத்துமா என்ற ரீதியில் இந்த நோயின் பரவும் தன்மை, தீவிரம் பற்றி விளக்கம் கேட்டதற்கு உலக சுகாதார மையத்தின் குரங்கு அம்மை வல்லுனர் ரோசமுண்ட் லீவிஸ்,“எங்களுக்கு தெரியாது. நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தற்போதைய சூழலில் உலகளவில் பெருந்தொற்றாக மாறாது” என பதில் அளித்து இருக்கிறார்.
அச்சம் தேவை இல்லை:
“இந்த பாதிப்பு தற்போது இருப்பதை விட அதிகளவில் பரவாமல் தடுக்க இப்போதும் அதிக நேரம் இருக்கிறது. இது குறித்து அதிக அச்சம் கொள்ளத் தேவை இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குரங்கு அம்மை பாதிப்பு 1980-க்களில் பல லட்சம் பேரை கொன்று குவித்த சின்ன அம்மை நோயுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால் குரங்கு அம்மை அதை விட குறைந்த அளவு தீவிரம் கொண்டது. குரங்கு அம்மை நோய் மூலம் பாதிக்கப்படுவோர் மூன்று முதல் நான்கு வாரங்களில் குணமடைந்து விடுவர். ஆரம்பத்தில் காய்ச்சல், உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவது இதன் அறிகுறிகள் ஆகும்.