90 ஆயிரத்தை நெருங்கியது கொடூர கொரோனா பலி..! நிலைகுலைந்து நிற்கும் உலக நாடுகள்..!

Published : Apr 09, 2020, 07:15 AM IST
90 ஆயிரத்தை நெருங்கியது கொடூர கொரோனா பலி..! நிலைகுலைந்து நிற்கும் உலக நாடுகள்..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 10 லட்சத்து 98 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 48 ஆயிரத்து 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 147 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 15 லட்சத்து 6 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 10 லட்சத்து 98 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 48 ஆயிரத்து 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 5274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். 411 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!