13 ஆயிரத்தை எட்டிய கொரோனா பலி..! நிலைகுலைந்து போயிருக்கும் உலக நாடுகள்..!

Published : Mar 22, 2020, 10:27 AM ISTUpdated : Mar 22, 2020, 10:30 AM IST
13 ஆயிரத்தை எட்டிய கொரோனா பலி..! நிலைகுலைந்து போயிருக்கும் உலக நாடுகள்..!

சுருக்கம்

உலகம் முழுவதும் கொரோனாவல் பலி 13 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,261 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்து 4,825 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 793 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,378 பேரும் பலியாகி உள்ளனர். பிரான்சில் 562 பேரும் அமெரிக்காவில் 344 பேரும் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ள நிலையில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.

கட்டுப்பாடில்லாத கொரோனா..! மீண்டும் சீனாவை குற்றம் சாற்றும் ட்ரம்ப்..!

உலகம் முழுவதும் கொரோனாவல் பலி 13 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!