அதாவது எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைராசால் அமெரிக்காவே மிககடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுவரை இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்து 05 ஆயிரத்து 957ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது, இது ஒட்டு மொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுவதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவது அமெரிக்கர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் 20,535,522 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்ப்பட்டுள்ளனர். இதுவரை 7,46,154 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 13,457,358 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 6,332,010 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உலக அளவில் சுமார் 64,663 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த வைரசைக் கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், இது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருவதால், இந்த வைரசுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர் நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மீண்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல் ஒரு நாளில் 1,280 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1.67 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதாவது எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைராசால் அமெரிக்காவே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 53 லட்சத்து 05 ஆயிரத்து 957ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு சுமார் 1 லட்சத்து 67 ஆயிரத்து 749 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 27 லட்சத்து 55 ஆயிரத்து 608 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுமார் 23 லட்சத்து 82 ஆயிரத்து 600 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,339 வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு நோய்தாக்கம் தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வைரஸ் தெற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறிவருவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.