பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி.! யுபிஎஸ்சி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்விகள்

Published : May 25, 2025, 02:18 PM IST
periyar

சுருக்கம்

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார், கவர்னரின் அதிகாரம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. 979 காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் இந்தக் கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல் கட்டமாகும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதி பெறுவர். மெயின் தேர்வு தாள்கள் விளக்கமான முறையில் இருக்கும். இந்த நிலையில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதனையடுத்து தேர்வெழுத திட்டமிட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு சில சர்ச்சையான கேள்விகளும் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், 78 வது கேள்வியில் இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என கேட்கப்பட்டுள்ளது. அதில் அம்பேத்கர், தினகர்ராவ் ஜவால்கர் ஆகியோருடன் பெரியார் ராமசாமி என்ற பெயருடன் நாயக்கர் என ஜாதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பொருள் ஆகி உள்ள கவர்னருக்கான அதிகாரம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதா கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி WFH செட் ஆகாது! 100 பேர் செய்யுற வேலையை ஈசியா முடிக்கும் AI.. கூகுள் விஞ்ஞானி எச்சரிக்கை
ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி