Pepsi & Coke : மெக்டொனால்டு முதல் பெப்சி, கோக் வரை… ரஷியாவில் எல்லாமே தடை !! பாவம்யா ரஷியா மக்கள் !!

By Raghupati R  |  First Published Mar 9, 2022, 8:58 AM IST

உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு உலக நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு உள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம், ஐநா பொதுச்சபை என்று பல மேடைகளில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


தீவிரமான போர் யுத்தம் :

பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை என்றும் உக்ரைன் நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் காரணமாக உலக நாடுகளும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

Latest Videos

undefined

கொரோனா வைரஸ் காரணமாகச் சீனா தவிர கிட்டதட்ட உலகின் அனைத்து நாட்டுப் பொருளாதாரங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  அதில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வந்த சூழலில் இந்தப் போர் சர்வதேச பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

போர் தொடர்ந்து வருவதால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள அப்பாவி மக்களால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  2ஆவது வாரமாக இந்தப் போர் தொடரும் நிலையில், இதை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா சார்பில் சில முக்கிய நிபந்தனைகள் உக்ரைன் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ளது.

விசா & மாஸ்டர் கார்ட் :

அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. தொடர்ந்து ரஷியா மற்றும் பெலாரசில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்தது. 

மேலும் ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டாக் செயலி நிறுவனம் தெரிவித்தது.  தொடர்ந்து ரஷியாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெக்டொனால்டு முதல் ஸ்டார்பக்ஸ் வரை : 

மேலும் உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஆப்பிள், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், ஐ.பி.எம், மெக்டொனால்டு போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.  இதனைத்தொடர்ந்து காபி ஹவுஸ் எனும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் ரஷியாவில் தங்களது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது. 

கோலா & பெப்சி தடை :

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக, ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அதிரடியாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கோகோ கோலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நடந்த இந்த சோகமான நிகழ்வுகளால் மனசாட்சியற்ற விளைவுகளைத் தாங்கும் மக்களுடன் எங்கள் இதயங்கள் உள்ளன. 

இதனால்  ரஷியாவில் எங்களது வணிகத்தை நிறுத்துகிறோம்’என்று தெரிவித்துள்ளது.  மேலும் இதுதொடர்பாக பெப்சி & கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நிகழும் கொடூரமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பெப்சி-கோலா மற்றும் 7Up மற்றும் மிரிண்டா உள்ளிட்ட எங்கள் உலகளாவிய குளிர்பான பிராண்டுகளின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக நாங்கள் அறிவிக்கிறோம்’ என்று அறிவித்து உள்ளது.

click me!