சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரமடையும் போர் :
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா தடை :
உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டார்.
இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ரஷியாவுக்கு ஆதரவு கொடுத்த இந்தியா ? :
சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ரஷியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ரஷிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒளிவிளக்குகளால் இந்திய அரசு அலங்கரித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
. has claimed in a tweet that Qutub Minar was lit up with the colours of the Russian flag.
▶️This claim is .
▶️Qutub Minar was illuminated as a part of the celebrations.https://t.co/d3twQg8S6N pic.twitter.com/pai4S3D9hM
இந்நிலையில், இந்த செய்தி உண்மை இல்லை என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த அலங்கரிப்பு மத்திய அரசின் நிகழ்ச்சி ஒன்றிருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், அது ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலோ, ரஷிய கொடியை பிரதிபலிக்கும் வகையிலோ இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.