Russia-Ukraine War: முதல் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து மக்களை அழைத்து வந்த சீனா

By Pothy Raj  |  First Published Mar 5, 2022, 12:31 PM IST

Russia-Ukraine War: போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைனிலிருந்து தங்கள் நாட்டு மக்களை தனிவிமானத்தை சீனா இன்று அழைத்து வந்தது. 
இந்தியா 3 விமானங்களில் தங்கள் குடிமக்களை அழைத்துவந்துவிட்ட நிலையில் முதல்விமானத்தை சீனா இப்போதுதான் அனுப்புகிறது.


போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைனிலிருந்து தங்கள் நாட்டு மக்களை தனிவிமானம் மூலம்  சீனா இன்று அழைத்து வந்தது. 
இந்தியா 3 விமானங்களில் தங்கள் குடிமக்களை அழைத்துவந்துவிட்ட நிலையில் முதல்விமானத்தை சீனா இப்போதுதான் அனுப்புகிறது.

சீனாவின் கிழக்குப்பகுதி மாகாணமான ஹீஜெங் தலைநகர் ஹாங்ஜூவுக்கு இன்று காலை சீன மக்களை அழைத்துக் கொண்டு  விமானம் வந்து சேர்ந்தது. சீனா அனுப்பிய முதல் செட் விமானங்கள் மூலம், உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து  சீன மக்கள் பத்திரமாக தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.

Tap to resize

Latest Videos

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவியதையடுத்து, 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அண்டை நாடான ரோமானியாவுக்கு சீன அரசு அனுப்பி வைத்தது. அங்கிருந்து சீன மக்களை தனிவிமானம் மூலம் அழைத்து வருகிறது. 

ரோமானியா தலைநகர் புச்சார்செட் நகரிலிருந்து சிஏ702 என்ற விமானம்  நேற்று இரவு புறப்பட்டு இன்று சீனா வந்து சேர்ந்தது. மற்றொரு விமானம் இன்று காலை 10.45 மணிக்கு மத்திய சீனாவில் உள்ள ஹெனன் மாகாணத்தில் உள்ள ஹென்ஜூ விமானநிலையத்தில் தரையிறங்கியது.

300க்கும் மேற்பட்ட பயணிகளை அழைத்து வருவதற்காக ஏர்பஸ் ஏ330-300 விமானங்களை சீனா அரசு பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி குளோபல் டைம்ஸ் நாளேட்டுக்கு உக்ரைனில் உள்ள சீன தூதரகம் அளித்த பேட்டியில், “ கார்கிவ் நகரிலிருந்து 180 சீன மக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உக்ரைன் அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது. வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து தொடங்கிய மீட்புப்பணி மூலம் ஏறக்குறைய அனைத்து மக்களும் வெளியேறவிட்டனர். சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 4 தனிவிமானங்கள் உக்ரைனுக்கு இயக்கப்பட்டு, சீன மக்கள் தாய்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் 

இதில் இரு விமானங்கள் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் சார்பில் இயக்கப்படுகின்றன. இந்த இரு விமானங்களும் சனிக்கிழமை லான்ஸ்ஹூ மற்றும் ஜினான் விமானநிலையத்துக்கு வந்து சேரும். அடுத்த இரு விமானங்கள் நாளை ஹினன் ஏர்லைன்ஸ் சார்பில் இயக்கப்படும். ” எனத் தெரிவித்துள்ளார்

click me!