பாவம்யா ரஷியா !! முதலில் பேஸ்புக், ட்விட்டர்.. இப்போ மைக்ரோசாப்ட்.. எல்லாமே போச்சா !!

By Raghupati R  |  First Published Mar 5, 2022, 8:01 AM IST

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதற்கிடையில், உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை  குறித்து பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

Tap to resize

Latest Videos

குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.  உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷிய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ரஷியா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷிய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்துள்ளது. 

இந்நிலையில், ரஷியாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷிய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷியாவில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம்.

உக்ரைன் மீதான ரஷியாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

click me!