Pak bomb blast: பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவர் நகரில் இன்று பிற்பகலில் மசூதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் உடல்சிதறி பலியானர்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவர் நகரில் இன்று பிற்பகலில் மசூதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் உடல்சிதறி பலியானர்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
பெஷாவர் நகரில் உள்ள குயிஷா கவானி பஜார் பகுதியில் உள்ள ஷியாபிரிவினரின் ஜாமியா மசூதியில் இன்று ஜும்மா தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் செய்திநிறுவனத்திடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸார், மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்டத் தகவலில் குண்டுவெடிப்பில் 40 பேர் பலியாகியிருக்கலாம், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்வர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்புக்குஇதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இநதப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதஅமைப்பு, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் இருவரும் பலமுறை தாக்குதல்நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.