உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்யா படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.
அணுமின் நிலையம் மீது குண்டுகள் விழுந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துளளார். அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் தெரிவித்தார். அந்த அணு உலை புதுப்பிக்கப்பட்டு இயங்கவில்லை என்றாலும் அதன் உள்ளே அணு எரிபொருள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.
உக்ரைன் நாட்டிற்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது. அணுமின் நிலையத்தின் அருகே கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சபோரோஷியா வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார்.
சபோரோஷியா அணுஉலை நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய உக்ரேனிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்ய படையினரிடம் உக்ரைன் வீழ்ந்தால் அடுத்த இலக்கு பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா) தான். ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தையே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி.
says troops are bombing Zaporizhzhia power plant, the largest one in Europe. He says it will be catastrophic if it blows up as it is 6 times larger than . pic.twitter.com/A8CwZbex6h
— Ia Meurmishvili (@iameurmishvili)புதின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். 30 மீட்டர் இடைவேளியில் அல்ல. நான் கடித்துவிடமாட்டேன். நீங்கள் ஏதற்காக பயப்படுகிறீர்கள்?’ என்று கூறினார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கும் ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவருக்கும் இடையேமிக நீளமான மேஜை அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.