சர்வதேச நாடுகளை அதிரவிட்ட சீனா..!! இந்தியா, அமெரிக்காவையும் நடுங்க வைக்கிறது..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2019, 5:48 PM IST
Highlights

இரண்டாவது  குழு தொழில்நுட்பத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கும், அத்துடன்  இக்குழுவில் 37 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். 
 

உலக நாடுகள் பல 5ஜி சேவையை வழங்கவே  உன்னை பிடி என்னை பிடி என  திண்டாடி வரும் நிலையில்  சீனா 6ஜி  சேவைக்கான பணிகளை துவக்கி  அதிரடி காட்டியுள்ளது.   5ஜி சேவை வழங்க துவங்கி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், கொரியா, உள்ளிட்ட  சில நாடுகள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது.  இந்தியாவில்  5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் 5ஜி சேவையை,  முழுமையாக பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுனர்கள்  திணறிவரும்கின்றனர் ஆனால்,  சீனா 6ஜி சேவையை தொடங்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.  இதற்கான அறிவிப்பை சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம். தெரிவித்துள்ளதுடன் இதை கண்காணிக்க இரண்டு குழுக்களையும் அமைத்துள்ளது. இதில் முதல் குழு, 6ஜி சேவைக்கான பயன்பாடுகளை ஆய்வு செய்யும்.  இரண்டாவது  குழு தொழில்நுட்பத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கும், அத்துடன்  இக்குழுவில் 37 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து ஆரம்பகட்டப் பணிகளை துவங்கி விட்டதாக ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.  இது தொடக்க பணிகள்தான் என்பதால்  முழுவதும் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது .  மற்ற நாடுகள்  5ஜி சேவையை வழங்கவே போராடி வரும் நிலையில் சீனா, 6ஜி  சேவையில் இறங்கியிருப்பது,  சர்வதேச நாடுகளை பிரமிப்படைய செய்துள்ளது. 
 

click me!