சீனா செய்த பாவம் என்ன...?? நெஞ்சை உலுக்கும் அடுத்தடுத்த கொடூரம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 14, 2020, 5:40 PM IST

சீனாவில் நடந்த மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா நாடு முழுவதும் பரந்த மற்றும் விரிவான தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது, இதனால் நாட்டில் வாகன போக்குவரத்து எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 


தென்கிழக்கு சீனாவில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானதில் அது சுக்குநூறாக வெடித்துச் சிதறியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 170 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெஜியாங் மாகாணத்தில் சனிக்கிழமை காலை இந்தகோர விபத்து நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் கோரப்பிடியிலிருந்து மீள முடியாமல் சீனா போராடிவருகிறது, அதற்கிடையில் அந்நாட்டில் ஏற்பட்ட கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தென் கிழக்கு சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர், வெள்ளப்பெருக்கில் 61 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீண்டுவருவதற்குள் சீனாவில் மற்றொரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . தென்கிழக்கு சீனாவில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

அதாவது ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) ஏற்றிக்கொண்ட டேங்கர் லாரி ஒன்று, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது, அப்போது வென்லிங் நகருக்கு அருகில் உள்ள லியாங்சன் கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அங்கிருந்த கட்டிடம் ஒன்றில் வேகமாக மோதியது, மின்னல் வேகத்தில் மோதியதன் காரணமாக அந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது, இந்நிலையில் அதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள், விபத்து நிகழ்ந்த அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருப்பதை காட்டுகிறது. லாரி மோதியதில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது, மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் இந்த விபத்து நடந்ததால் அங்கிருந்து சுமார் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், சுமார் 170 க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து  வென்லிங்கின் துணை மேயரான ஜு மிங்லியன் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் மீட்பு பணியை துரிதப்படுத்தினார்,  சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர், மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டேங்கர் வெடித்த இடத்தில் ஏராளமான வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள், விற்பனை நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சீனாவில் நடந்த மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா நாடு முழுவதும் பரந்த மற்றும் விரிவான தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது, இதனால் நாட்டில் வாகன போக்குவரத்து எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் சாலைப்போக்குவரத்து நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது, உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் விபத்தில் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கோரவிபத்து குறித்து விசாரணை நடத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

click me!